Tuesday, November 9, 2021

இதய நோய்கள் வராமல் தடுக்க இந்த உணவு மற்றும் தீநீர் சாப்பிடுங்க!


இதய நோய்கள் வராமல் தடுக்க இந்த உணவு மற்றும் தீநீர் சாப்பிடுங்க 1. இதயம் தொடர்பான நோய்கள் ஆரம்ப நிலையில் கண்டறியப்படாவிட்டால் அவை உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். எனவே ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை பெறுவதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியம். 2. ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் : உடலில் #எடை அதிகரித்தால் அது பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். குறிப்பாக #இதயநோய்அபாயம் அதிகரிக்கிறது. உடல் பருமன் அதிகரித்தால் #உயர்இரத்தஅழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவுகள் மற்றும் நீரிழிவு போன்ற பிற இதய நோய் ஆபத்து காரணிகளையும் ஏற்படுத்தும். எனவே உங்கள் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது இதய நோய் ஆபத்தை குறைக்கிறது. 3. மது, புகைப்பிடிப்பதை தவிர்க்கவும் : குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். அதிகமாக மது அருந்துவது உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் உடலில் கூடுதல் கலோரிகளையும் சேர்க்கிறது. அதேபோல புகைப்பிடிப்பதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது மற்றும் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே மது அருந்துவது, புகைப்பிடிப்பதை அறவே தவிர்த்து விடுவது நல்லது. 4. மன அழுத்தத்தை கட்டுப்படுத்துங்கள் : மன அழுத்தம் பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது, அதில் இதய நோய்கள் முக்கியமானது. குறிப்பாக கோவிட் -19 தொற்றுநோய்களின் போது மன அழுத்தம் பெரும்பாலானோருக்கு அதிகரித்துள்ளது. மன அழுத்தம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது மற்றும் தீவிர மன அழுத்தம் மாரடைப்பிற்கும் வழிவகுக்கும். மனஅழுத்தத்தை நிர்வகிக்க தற்போது பெரும்பாலானோர் அதிகப்படியான குடிப்பழக்கம் மற்றும் புகைபிடித்தல் ஆகியவற்றிற்கு அடிமையாகின்றனர். ஆனால் அவை உங்கள் இதயத்திற்கு மோசமானவை. எனவே தினமும் உடற்பயிற்சி செய்வது, இசை கேட்பது மற்றும் தியானம் செய்வது, செடிகள் வளர்ப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடலாம். #ShreeVarma #DrGowthaman #healingmeditation #healingmeditationwithguruji #wellnessguruji #cad #chd #heartdisorders www.shreevarma.org www.drgowthaman.com 5. சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள் : நீரிழிவு நோயாளிகளுக்கு இதய நோயால் பாதிக்கப்படும் அபாயம் இரண்டு மடங்காக உள்ளது. ஏனெனில் நீரிழிவு நோயிகளின் உயர் இரத்த சர்க்கரை இரத்த நாளங்கள் மற்றும் இதயத்தைக் கட்டுப்படுத்தும் நரம்புகளை பாதிக்கிறது. எனவே உங்கள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 180 எம்.ஜி-க்கு மேல் அதிகரிக்கும் பொழுது அதனை சர்க்கரை நோயாக மாறுகிறது. எனவே உங்கள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் அன்றாடம் உடற்பயிற்சி செய்வது, முறையான டயட்டை பின்பற்றுவதும் முக்கியம். 6. போதுமான உறக்கம் : தூக்கமின்மை உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இந்த நோய்கள் இதயத்தை மேலும் பலவீனப்படுத்த வழிவகுக்கிறது. எனவே தினமும் இரவில் 7-8 மணிநேரம் தூங்க வேண்டும். தற்போது ஏராளமானோர் செல்போன்கள், டிவி பார்த்து கொண்டே இரவில் லேட்டாக தூங்குகின்றனர். இதன் விளைவாக பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்படுகிறது. எனவே தினமும் போதுமான நேரம் தூங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள். படுக்கைக்கு செல்வதற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்னர் கணினி, செல்போன், டிவி பார்ப்பதை தவிர்த்து விடுங்கள்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவு முறை …


உங்க #சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க இந்த உணவு மற்றும் டீயை சாப்பிடுங்க ! இதுதான் உணவு முறை… இப்படி சாப்பிட்டா உங்க #சுகர்அளவு கட்டுக்குள் இருக்கும்! சிறந்த வகை உணவுகள் : #மாவுச்சத்து இல்லாத காய்கறிகளான கீரைகள், ப்ரோக்கோலி, மிளகு மற்றும் தக்காளி. ஓட்மீல், பிரவுன் ரைஸ் மற்றும் தானிய ரொட்டிகள் போன்ற முழு தானிய உணவுகள். முலாம்பழம், ஆப்பிள், வாழைப்பழம் உள்ளிட்ட பழங்கள். மீன், கோழி, நட்ஸ் போன்ற புரதச்சத்து உணவுகள். தயிர் அல்லது பால் போன்ற குறைந்த கொழுப்பு உணவுகள். #நீரிழிவு உணவுக்கு மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, கோழி மற்றும் மீன் போன்ற புரதச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள் சிறந்தவை என லைசூலின் நிறுவனர், மருத்துவ ஆராய்ச்சியாளரும் ஜான் பர்ட் தெரிவித்துள்ளார். ஏனென்றால் கார்போஹைட்ரேட்டுகள் போல புரதங்கள் கொழுப்பை குளுக்கோஸாக மாற்றாது. அதேபோல பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் அதிகளவு நார்ச்சத்துக்களை கொண்டிருக்கின்றன, என்பதால் இவற்றை அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்லது நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் : நீரிழிவு நோயாளிகள் நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இதில் சோடா போன்ற சர்க்கரை பானங்கள், குக்கீகள், மிட்டாய் போன்ற இனிப்பான பதப்படுத்தப்பட்ட உணவுகள், வெள்ளை ரொட்டி, எண்ணெய்யில் வறுத்த உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. மேலும் நீங்கள் சரியான உணவு திட்டத்தை பின்பற்ற விரும்பினால், கீழே உள்ள மூன்று டயட் முறைகளை பின்பற்றவும். #மத்தியதரைக்கடல்உணவுமுறை : மத்திய தரைக்கடல் டயட் முறையில் பழங்கள், காய்கறிகள் மற்றும் நட்ஸ் போன்ற தாவர அடிப்படையிலான உணவுகள் எடுத்து கொள்ளப்படுகிறது. மேலும் மீன் போன்ற புரதம் நிறைந்த உணவுகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் போன்றவை நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது, உதாரணமாக 2009ம் ஆண்டு நீரிழிவு மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், மத்திய தரைக்கடல் டயட் முறை மூன்று மாத காலம் பின்பற்றும் போது உணவுக்குப் பிறகு இரத்த சர்க்கரை அளவு குறைவதாக தெரியவந்துள்ளது. 2010ம் ஆண்டு நீரிழிவு நோய் தடுப்பு மற்றும் மருத்துவ நடைமுறையில் வெளியிடப்பட்ட ஆய்வில் நீரிழிவு நோயைத் தடுப்பதற்கும், இரத்த சர்க்கரைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், உயர் இரத்த சர்க்கரை உட்பட இருதய ஆபத்து காரணிகளைக் குறைப்பதற்கும் மத்தியதரைக் கடல் டயட் உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. #மத்தியதரைக்கடல்டயட்உணவு : காலை உணவு : தயிருடன் பெர்ரி மற்றும் பருப்பு வகை உணவுகள். மதிய உணவு: ஆலிவ் எண்ணெய் சேர்த்த காய்கறிகள் சாலட், சால்மன் மீன் மற்றும் முழு கோதுமை ரொட்டி. இரவு உணவு: காய்கறிகள், முழு தானியங்கள் அடங்கிய பீட்ஸா மற்றும் குறைந்த கொழுப்பு சீஸ். சிற்றுண்டி: நட்ஸ், பழங்கள் மற்றும் முட்டை. #DASHDiet டயட்முறை: DASH உணவு மத்தியதரைக் கடல் டயட் முறையை மிகவும் ஒத்திருக்கிறது. பழங்கள், காய்கறிகள் மற்றும் புரதங்கள் நிறைந்த உணவானது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். எடுத்துக்காட்டாக, அமெரிக்க நீரிழிவு சங்கத்தின் இதழான நீரிழிவு ஸ்பெக்ட்ரமில் வெளியிடப்பட்ட 2017 ஆய்வில், DASH டயட் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதனால் DASH உணவு "நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய உணவு முறை" என்று தெரிவித்துள்ளது. மேலும் நீரிழிவு மேலாண்மையில் வெளியிடப்பட்ட 2019 ஆய்வில், DASH உணவைப் பின்பற்றுவது இளைஞர்களுக்கு மிகவும் அவசியமானது என்று கண்டறியப்பட்டது. மேலும் DASH உணவுமுறையை பின்பற்றும் டைப் 1 நீரிழிவு நோய் 18 நாட்களுக்குப் பிறகு நல்ல முடிவு தெரியும். கூடுதலாக, 2016ம் ஆண்டு நியூட்ரிஷன் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், DASH உணவைக் கடைப்பிடிப்பதால் கர்ப்பகால நீரிழிவு நோயை 71% வரை குறைக்க முடியும் என தெரியவந்தது. DASH உணவு பட்டியல் : காலை உணவு: காய்கறிகள், குறைந்த கொழுப்பு நிறைந்த ஆம்லெட். மதிய உணவு: காய்கறி சூப், சாலட் வகைகள். இரவு உணவு: கோழி கறி, உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள். சிற்றுண்டி : பழங்கள், நட்ஸ், குறைந்த கொழுப்பு நிறைந்த சீஸ். #ShreeVarma #DrGowthaman #healingmeditation #healingmeditationwithguruji #wellnessguruji www.shreevarma.org www.drgowthaman.com For Online appointments - 9500946638 / 9500946639 #Ketodiet உணவுமுறை : Keto diet உணவு முறை கார்போஹைட்ரேட் உணவுகள் சாப்பிடுவதை குறைத்து புரதச்சத்துக்கள் அடங்கிய உணவுகளை சாப்பிடுவதாகும். இது உங்கள் உடலில் கொழுப்புகளை எரித்து சர்க்கரை அளவை குறைக்கிறது. டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இது உதவியாக இருக்கும். உதாரணமாக, 2019ம் ஆண்டு ஊட்டச்சத்துகள் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், கீட்டோ உணவு இரத்த சர்க்கரையை குறைக்க பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. காலை உணவு: பன்றி இறைச்சி மற்றும் முட்டை. மதிய உணவு: பழங்கள் இரவு உணவு: காய்கறிகள். சிற்றுண்டி: வெண்ணெய், நட்ஸ், சீஸ்.